வன்னியில் போரின் கொடுமை - மக்களின் துயரினைப் போக்க வேண்டும் - சர்வதேசத்திடம் கோரிக்கை:
வன்னியில் போரின் கொடுமையால் துன்பப்படும் மக்களின் துயரினைப் போக்க சர்வதேச நிறுவனங்களும் உள்ளுர் பொது நிறுவனங்களும் உடனடியாக முன்வர வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அம்பாறை - சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சிங்களமொழிச் சுற்று நிரூபம் :
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 700 க்கும் மேற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்ற பொழுதும் சமுர்த்தி அதிகாரசபை அனைத்து சுற்று நிருபங்களையும் சிங்கள மொழியில் அனுப்புவதால் தாம் உடன் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உரிமைக்காகவும் வறுமைக்காகவும் போராடும் இளைஞர்களை அரசாங்கம் அழித்தொழிக்கிறது – விக்கிரமபாகு:
வடக்கில் உரிமைக்காகப் போராடும் தமிழ் இளைஞர்களையும் தெற்கில் வேலை வாய்ப்பின்மை, வறுமை என்பவற்றை எதிர்த்துப் போராடும் இளைஞர்களையும் இராணுவபலத்தின் ஊடாக அழித்தொழிக்கும் இரண்டு வகையான யுத்தங்களையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என இடதுசாரிமுன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடற்படையால் இழுத்துச் செல்லப்பட்ட கணவர் வெள்ளைவான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார் - மனைவி முறைப்பாடு:
கொழும்பு புதுச்செட்டித்தெரு 70ஃ27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ் கடல் நீரேரியில் திடீர் கொந்தளிப்பு:
யாழ். கடல்நீரேரியில் நேற்று திங்கட்கிழமை காலை திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. காலை 9.25 மணியளவில் ஏற்பட்ட இந்தத் திடீர் கடற்கொந்தளிப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது.
சிறுபான்மையினமா – காவற்துறை அதிகாரியின் குடும்பமும் கைது செய்யப்படலாம்:
கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினரும் கண்டி காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
வடக்கில் அனைத்து வைத்தியசாலைகளிலும் படையினருக்கு தனிப் பிரிவு ஜனாதிபதி உத்தரவு:
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச்சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
பராக் ஒபாமவிற்கு ரஞ்சன் ராமநாதன் நிதியுதவி?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தமிழர் புனாவாழ்வு கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் ரஞ்சன் ராமநாதன் என்பவர் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது:
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (20) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நாடாக இலங்கையை மேற்குலகம் பட்டியலிட்டுள்ளது – விமல்:
வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
